ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில், அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2018-11-24 22:45 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் போர் நடவடிக்கைகளை 2014-ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்து விட்டன.

ஆனாலும் 16 ஆயிரம் வீரர்கள் அங்கு தொடர்ந்து இருந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தான் படைவீரர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த ஒரு தாக்குதலில் அமெரிக்க படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்க ராணுவ துறை கொள்கையின்படி, படை வீரர் ஒருவர் இறந்தால், அவர் பெயர் விவரம் உள்ளிட்ட தகவல்களை, அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்து 24 மணி நேரம் கடந்தபின்னர்தான் பகிரங்கமாக அறிவிப்பர்; எனவே ஆப்கானிஸ்தானில் இறந்த அமெரிக்க வீரர் பெயரும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக நிம்ரோஸ் மாகாணத்தின் காஷ்ருத் மாவட்டத்தில் புஷ்ட் ஹசன் கிராமத்தில் பதுங்கி உள்ள தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து, நேற்று முன்தினம் வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.


மேலும் செய்திகள்