உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவுக்கு 4வது இடம்; ஆய்வில் தகவல்

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

Update: 2018-12-06 09:50 GMT
புதுடெல்லி,

உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவது பற்றி குளோபல் கார்பன் புராஜெக்ட் என்ற பெயரிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.  இதில், 2017ம் வருடத்தில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்) மற்றும் இந்தியா (7 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இந்த நாடுகளில் இருந்து 58 சதவீதம் அளவிற்கு கரியமில வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.  மற்ற நாடுகள் 41 சதவீதம் அளவிற்கு கரியமில வாயுக்களை வெளியேற்றுகின்றன.

2018ம் ஆண்டில், தொடர்ந்து வலுவாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவின் கரியமில வாயுக்கள் வெளியேற்றம் சராசரியாக 6.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  இவற்றில் நிலக்கரி (7.1 சதவீதம்), எண்ணெய் (2.9 சதவீதம்) மற்றும் வாயு (6.0 சதவீதம்) என அனைத்து எரிபொருள்களின் பயன்படுத்துதலில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.

நாட்டு பொருளாதாரத்தில் அரசின் முக்கிய தலையீட்டால், கடந்த 2017ம் வருடத்தில் இந்திய கரியமில வாயு வெளியேற்ற அளவானது, அதற்கு முந்தைய 10 வருடங்களின் சராசரியான 6 சதவீதம் என்ற அளவில் ஒப்பிடும்பொழுது, 2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த ஆய்வில் முதல் 10 இடங்களில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்