உலகைச் சுற்றி

* ஈரான் நாட்டில் சாபஹார் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2018-12-06 21:30 GMT
* லண்டன் நகரில் ‘புதிய பாகிஸ்தான் சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி சவுத்ரி பவாத் உசேன் கலந்து கொண்டு பேசினார். அவர், பாகிஸ்தான்–இந்தியா இடையே காஷ்மீர் பிரச்சினை முக்கிய பிரச்சினை. இதில் அமைதித் தீர்வில்தான் பாகிஸ்தான் நம்பிக்கை வைத்துள்ளது என கூறினார்.

* ரஷியாவை சேர்ந்த அமர் என்பவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார். அவர் அங்கு காவலில் வைக்கப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றபோது மீட்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இது குறித்து அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் விசாரணை நடத்துகிறது.

* வட கொரிய வெளியுறவு மந்திரி ரி யாங் ஹோ சீனாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  

* இந்தோனேசியாவில் லாம்போக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.

* ஆப்கானிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 20–ந் தேதி நாடாளுமன்ற தேர்தலின்போது காபூல் தொகுதியில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்