இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்கிறார் விஜய் மல்லையா

இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய விஜய் மல்லையா உத்தேசித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Update: 2018-12-19 14:09 GMT

லண்டன்,
  
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 62), இங்கிலாந்துக்கு தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை இங்கே நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த வாரம் உத்தரவிட்டது.   இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய இயலும்.  தீர்ப்பு தொடர்பாக என்னுடைய சட்டக்குழு ஆய்வு செய்து நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று விஜய் மல்லையா ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 
 
இந்நிலையில் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய விஜய் மல்லையா உத்தேசித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

 நாடு கடத்துவது தொடர்பான உத்தரவு இங்கிலாந்து உள்துறை செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர் நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார். முடிவெடுக்க அவருக்கு இரு மாதங்கள் அவகாசம் உள்ளது. சரியான நேரத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதிக்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்ய விஜய் மல்லையா உத்தேசித்திருப்பதாக அவருடைய சட்டக்குழு உறுதிசெய்துள்ளது.

மேலும் செய்திகள்