பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-12-24 10:33 GMT
இஸ்லாமாபாத்

‘பனாமா கேட்’  ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த  பாகிஸ்தான்  பொறுப்புணர்வு  நீதிமன்றம் அவருக்கு  7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் சிங்கம் என அறியப்படும் நவாஸ் செரீப், அரசியல் நிலையின்மை கொண்ட பாகிஸ்தானின் வரலாற்றில் மூன்று முறை பிரதமர் ஆகி உள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் பிரதமர் பதவியில் இருந்து அவர் அகற்றப்பட்டு வருகிறார். முதலில் ஜனாதிபதியால், பின்னர் ராணுவத்தால் இப்போது நீதித்துறையால் அவர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் அதிகாரம் நிறைந்த அரசியல் குடும்பம் நவாஸ் செரீப் குடும்பம், அவருடைய கட்சியான பிஎம்எல் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்).

நவாஸ் செரீப் முதல் முறையாக 1990-1993 கால கட்டங்களில் பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். அப்போது அப்போதைய அதிபர் குலாம் இஷ்காக் கானுடன் மோதல் போக்கு ஏற்பட்டதை அடுத்து அவருடைய ஆட்சி ரத்து செய்யப்பட்டது.  பின்னர் அழுத்தம் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார் நவாஸ் செரீப். பின்னர் 1997-ல் பிரதமர் ஆனார். அப்போதும் அவருடைய முழு பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை. 1999-ம் ஆண்டு அவருடைய ஆட்சியை அப்போது ராணுவ அதிகாரம் கொண்ட பர்வேஷ் முஷாரப்பால் வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியமுக்கு  7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘பனாமா கேட்’  ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவந்த  பாகிஸ்தான்  பொறுப்புணர்வு  நீதிமன்றம் அவருக்கு  7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது. 

மேலும் செய்திகள்