32 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட அர்ஜென்டினா பெண் மீட்பு

அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பெண், சிறுமியாக இருந்தபோது 1986-ம் ஆண்டில் பொலிவியாவுக்கு கடத்திச் செல்லப்பட்டார். தற்போது 45 வயதாகிற அந்தப் பெண், என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடையாது.

Update: 2018-12-26 23:15 GMT
சுக்ரே,

தெற்கு பொலிவியாவில் பெர்மிஜோ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில்  அந்தப் பெண் உள்ளார் என்று போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அர்ஜென்டினா மற்றும் பொலிவியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு போலீஸ் படை, அந்த வீட்டை சமீபத்தில் சுற்றி வளைத்தது.

அங்கு இருந்து அந்தப் பெண்ணும், அவரது 9 வயது மகனும் மீட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்தப்பெண் மற்றும் அவரது மகன் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி அர்ஜென்டினா போலீஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “1986-ல் கடத்தி செல்லப்பட்ட அந்தப் பெண், மார் டெல் பிளாட்டா நகரில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்” என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பெண் யாரால், எதற்காக கடத்திச் செல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்