உலகைச்சுற்றி...

* ஹாங்காங்கில் சிங் மூன் என்கிற இடத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்தார். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-14 23:00 GMT
* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர்கள் 3 பேர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

* போலந்து நாட்டின் துறைமுக நகரமான கடான்ஸ்கின் மேயரான பாவல் அடோமோவிக்ஸ் என்பவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, மர்ம ஆசாமி ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* ரஷியாவின் ராஸ்டோவ் பிராந்தியத்தில் ஷாக்டேவ் என்கிற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பல்வேறு மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. விமான நிலையங்களில் ஓடுபாதைகளில் பனி மூடி கிடப்பதால் சுமார் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்