கனடாவை சேர்ந்தவருக்கு சீனாவில் மரண தண்டனை இரு நாட்டு உறவு பாதிப்பு

கனடாவை சேர்ந்தவருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது இதற்கு கனட பிரதமர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-01-15 05:11 GMT
2014-இல் 36 வயதான ராபர்ட் சீனாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 227 கிலோ எடையுள்ள போதைபொருளை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.கடந்த நவம்பரில் இது தொடர்பாக அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தாலியன் நகரை சேர்ந்த ஒரு உயர் நீதிமன்றம் அவருக்கு நேற்று  மரண தண்டனை விதித்தது.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க சீன பெருநிறுவனமான ஹுவாவேயை சேர்ந்த ஒரு முக்கிய அதிகாரியை கனடா கைது செய்ததை அடுத்து, எதிர்பாராத விதமாக ராபர்ட் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

மரண தண்டனை  தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ராபர்ட்க்கு 10 நாட்கள் அவகாசம் உள்ளது. ராபர்ட் மேல்முறையீடு செய்வார் என்று அவரின் வழக்கறிஞர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்  தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதித்த சீன நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில், ''ஓர் அரசாக இந்த தீர்ப்பு மற்றும் சூழல் எங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. சீனா எங்கள் நாட்டை சேர்ந்தவருக்கு மரண தணடனை விதித்துள்ள நிலையில், இது எங்கள் தோழமை நாடுகளுக்கும் கவலை அளிப்பதாக அமைகிறது'' என்று ட்ரூடோ கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்