உலகைச்சுற்றி....

ஆப்கானிஸ்தானின் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது.

Update: 2019-01-22 22:45 GMT

* சிங்கப்பூரில் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த கணேசன் சிங்காரவேல் (வயது 31) என்பவர், முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். பின்னர் அது வதந்தி என்பதும் குடிபோதையில் அவர் இப்படி செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் சிங்காரவேலுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

* ஆப்கானிஸ்தானின் வார்டாக் மாகாணத்தின் தலைநகர் மைதான் ஷாரில் உள்ள ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது.

* அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தின் வெய்னே கவுண்டியில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் சல்மாய் மமோசேய் கலில்சாத், அடுத்த மாதம் மாஸ்கோ வரஉள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

* ரஷியாவை சேர்ந்த முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவருடைய 34 வயது மகள் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரசாயன தாக்குதலுக்கு உள்ளாகினர். இது ரஷியாவின் சதி என குற்றம் சாட்டப்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த 4 பேரின் சொத்துக்களை ஐரோப்பிய யூனியன் முடக்கி உள்ளது.

* தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதியதில் 34 வயது பெண் மற்றும் அவரது மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


மேலும் செய்திகள்