இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-01-22 23:00 GMT
ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் சும்பவா தீவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 31 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

கடந்த மாதம் சுமத்ரா எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்