அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம்: டிரம்புக்கு பாடகி லேடி காகா கண்டனம்

அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் தொடர்பாக, அதிபர் டிரம்புக்கு பாடகி லேடி காகா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-22 23:30 GMT
வாஷிங்டன்,

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஹாலிவுட் திரையுலகின் பிரபல பாடகி லேடி காகா, அரசுத்துறைகள் முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் படி வலியுறுத்தி உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும். ஏனெனில் வாரந்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் அரசு ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பிழைத்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்