ராணுவ வீரர்களை பாதியாக குறைக்க சீனா திட்டம்

ராணுவ வீரர்களை பாதியாக குறைக்கவும், அதேசமயம் கடற்படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Update: 2019-01-23 07:56 GMT
சீனா,

உலகிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது. சீன ராணுவத்தில் சுமார் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர். ராணுவத்தை சீரமைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பின் உத்தரவிட்டதன் பேரில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.

அதேசமயம் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படை, விமானப்படை ஆகியவற்றை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரத்தில் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவு போன்றவை நவீனப்படுத்தப்பட உள்ளன. கடந்த சில வருடங்களாகவே கடற்படையை சீனா பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்