பாகிஸ்தான் சிறையில் உள்ள நவாஸ் ஷெரிப் உடல்நிலை பாதிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் கோட் லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-01-23 18:45 GMT
லாகூர், 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் கோட் லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 69 வயதாகும் அவருக்கு இருதய கோளாறு உள்ளது. நேற்று முன்தினம் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபின்னர் சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடம் இல்லை என்றாலும், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும், தவறாமல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றனர். நவாஸ் ஷெரிப்பின் டாக்டர் அட்னன் கான் கூறும்போது, ‘‘அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தாமதிக்காமல் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்