உலகைச்சுற்றி....

சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளை நாளை தலைநகர் பீஜிங்கில் சந்தித்து பேசுகிறார்.

Update: 2019-02-13 22:30 GMT

* அமெரிக்காவில் நிதிமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இந்தியர்கள் உள்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

* கென்யாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள நரோக் நகரில் குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியாகினர்.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த ஜனாதிபதி டிரம்பின் பிரசாரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிபிசி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். இதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்.

* சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளை நாளை(வெள்ளிக்கிழமை) தலைநகர் பீஜிங்கில் சந்தித்து பேசுகிறார்.

* வெனிசூலாவில் இன்னும் ஓரிரு நாட்களில் அதிபர் பதவியில் இருந்து நிகோலஸ் மதுரோ வெளியேற்றப்படுவார் எனவும், அங்கு விரைவில் ஜனநாயகம் மலரும் எனவும் சிலி அதிபர் செபாஸ்டின் பினேரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோவினல் மோய்ஸ் பதவி விலகக்கோரி நடந்து வரும் போராட்டங்களில் கலவரம் வெடித்தது. அக்வின் நகரில் நடந்த கலவரத்தை பயன்படுத்தி அங்குள்ள சிறையில் இருந்து சுமார் 80 கைதிகள் தப்பினர்.

மேலும் செய்திகள்