மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ்

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-02-19 16:18 GMT
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளது. அந்தக் கவுன்சிலில், வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயன்று வருகிறது. ஆனால் அதற்கு சாதகமான சூழ்நிலை தென்படவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை சீனா தடுத்து வருகிறது. 

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியை மற்ற நாடுகள் ஆதரிக்க சீனா மட்டும் தடையை ஏற்படுத்தியது. வீட்டோ அதிகாரம் கொண்ட ஒரு நாடு தடையை ஏற்படுத்தினாலும் தீர்மானம் நிறைவேறாது. புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் இரண்டாவது முறையாக இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

மேலும் செய்திகள்