புல்வாமா தாக்குதல்: ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தல்

புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-02-21 11:02 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர்  மாநிலம் புல்வாமாவில்  பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் அடல் அல் சுபீர் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், இது உண்மையென நிரூபிக்கப்பட்டால், அந்த அமைப்பின் மீது ஐநா சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின்  தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்