உலகைச்சுற்றி...

* மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரின் குவாயாகில் நகரில் உள்ள வெனிசூலா தூதரக கட்டிடத்தை 3 பெண்கள் உள்பட 7 பேர் சூறையாடினர். தூதரக ஊழியர்களை சரமாரியாக தாக்கிய அவர்கள், அங்கிருந்து பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

Update: 2019-02-21 21:16 GMT
* உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பேராயர்கள் மற்றும் பாதிரியார்களால் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிப்பதற்கான மாநட்டை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகனில் நேற்று தொடங்கினர். அப்போது பேசிய அவர் குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் தீர்க்கமான நடவடிக்கை தேவைப்படுவதாக கூறினார்.

* மெக்சிகோவில் சினலோவா மாகாணத்தில் கடல் வழியாக படகு மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதை கடற்படை விமானம் கண்டறிந்தது. அதனை தொடர்ந்து அந்த படகை சுற்றிவளைத்த கடற்படை அதிகாரிகள் அதில் இருந்த 650 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

* அமெரிக்க கடற்படை அதிகாரியும், முன்னாள் மாலுமியுமான கிறிஸ் ஹஸ்சோன் (வயது 49) பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக கூறி மேரிலாந்து மாகாண போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி வீட்டில் அபாயகரமான ஆயுதங்களை குவித்துவைத்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்