புல்வாமா தாக்குதலை கண்டித்து ஐநா தலைமை அலுவலகம் முன்பு இந்திய வம்சாவளியினர் போராட்டம்

புல்வாமா தாக்குதலை கண்டித்து ஐநா தலைமை அலுவலகம் முன்பு இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-04 09:42 GMT
நியூயார்க்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ்  இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள்  40 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை தலைமை அலுவலகம் முன்பு கூடிய இந்திய வம்சாவளியினர், புல்வாமா தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாகிஸ்தான், தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் தங்கள் கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் ஆசாருக்கு எதிராக  பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்