பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் அமைப்புக்கு தடை விதித்தது

பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் அமைப்புக்கு தடை விதித்தது. மேலும் அதன் துணை அமைப்புகளையும் தடை செய்து உள்ளது.

Update: 2019-03-06 05:17 GMT
இஸ்லாமாபாத்,

இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க போராடும் இந்தியாவின் முயற்சிக்கு தடையை ஏற்படுத்தி உள்ள சீனா தன்னுடைய நிலையை நியாயப்படுத்தி உள்ளது.

பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்து உள்ளன.

புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் விவகாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பலவேறு நாடுகள் மசூத் ஆசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டு உள்ளன. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரன் முப்தி அப்துர் உள்பட 44 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது என அந்நாட்டு உளவுத்துறை அமைச்சர் ஷெக்யார் கான் அப்ரீடி கூறியுள்ளார்.

இது போல் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம், பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உத்-தவா (ஜெயுடி) மற்றும் அதன் துணை நிறுவனமான பாலா-ஐ-இன்சானியட் பவுண்டேஷனை (FIF)  தற்காலிகமாக தடை செய்து உள்ளது. 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக விளங்கிய ஹபீஸ் சயீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் 1997 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்று தான்.  இது போன்று ஒரு பயங்கர தாக்குதல் நடக்கும்  போது உலக நாடுகளை ஏமாற்ற பயங்கரவாதிகளை கைது செய்து சிறையில் சிறப்பு கவனிப்பு கொடுத்து, பிரச்சினை முடிந்ததும் பத்திரமாக வெளியிட்டு விடும்.

மேலும் செய்திகள்