உலகைச்சுற்றி......

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்கியதில் 23 பேர் பலியாகினர்.

Update: 2019-03-06 22:15 GMT

* பிலிப்பைன்சின் மின்டானோவ் தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்கியதில் 23 பேர் பலியாகினர். அங்குள்ள பல நகரங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதையடுத்து அலபாமா மாகாணத்தை பேரிடர் மாகாணமாக ஜனாதிபதி டிரம்ப் பிரகடனப்படுத்தினார்.

*தென்கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியூங் பக், கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அந்நாட்டு கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

*பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது இஸ்ரேல் விமானப்படையின் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. எனினும் இந்த வான்தாக்குதலில் பயங்கரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

* சிரியாவின் அலெப்போ மாகாணம் மராகா நகரில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து சிதறியதில் அப்பாவி மக்கள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் செய்திகள்