எத்தியோப்பியாவில் விமான விபத்து: தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பயணி

எத்தியோப்பியாவில் விமான விபத்து நிகழ்ந்த போது, தாமதமாக வந்ததால் பயணி ஒருவர் உயிர் தப்பினார்.

Update: 2019-03-11 23:15 GMT
அடிஸ் அபாபா,

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில், கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்பவர் பயணம் செய்ய இருந்தார். ஆனால் அவர் விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை. விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. விமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்