ஸ்வீடனில் பனிப்புயல்: 3 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது.;
ஸ்டாக்ஹோம்,
ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. பல நாடுகளில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. குறிபாக, ஸ்வீடன் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்வீடனில் திடீரென பனிப்புயல் வீசியது. இந்த பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பனிப்புயலின்போது காற்றின் வேகமவும் அதிகமாக இருந்தது. பனிப்புயலால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒருசில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.