வங்காளதேச முன்னாள் பிரதமரின் உடல்நிலை தொடர்ந்து மோசம்; டாக்டர் தகவல்
கலியா ஜியா தொடர்ந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
டாக்கா,
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவர் 1991ம் ஆண்டு முதல் 1996 வரையும், பின்னர் 2001 முதல் 2006 வரையும் வங்காளதேசத்தின் பிரதமராக செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கலிதா ஜியா கடந்த மாதம் 23ம் தேதி முதல் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11ம் தேதி முதல் அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கலியா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், கலியா ஜியா தற்போது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளார். கலியா ஜியா தொடர்ந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.