பெருவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-12-28 14:46 IST

லிமா,

பெரு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பெரு நாட்டின் கடற்கரையில் காலை 8.21 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

67 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 8.93 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 78.90 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

உள்ளூர் நேரப்படி இந்த நிலநடுக்கம் இரவு 9:51 மணிக்கு அன்காஷ் பிராந்தியத்தில் உள்ள சிம்போட் நகருக்கு அருகில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்