உக்ரைனுக்கு 2.5பில்லியன் டாலர்கள் நிதியுதவி - கனடா அறிவிப்பு
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 403வது நாளாக போர் நீடித்து வருகிறது.;
ஒட்டாவா,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 403வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கனடா சென்றார். அவர் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப்பின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உக்ரைனுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்குவதாக கனடா பிரதமர் கார்னி அறிவித்தார். இந்த நிதியுதவி உக்ரைனை மறுகட்டமைப்பு செய்யவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என்றார்.
இதையடுத்து, கனட பயணத்தை நிறைவு செய்த ஜெலன்ஸ்கி அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவர் இன்னும் சில மணிநேரங்களில் டொனால்டு டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.