நேபாளத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; மக்கள் அலறியடித்து ஓட்டம்

நேபாளத்தில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-04-16 13:07 GMT
காத்மண்டு,

நேபாளத்தின் கோர்கா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.

கடந்த 5 நாட்களில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இதுவாகும்.  எனினும் உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் இல்லை.  கடந்த 13ந்தேதி ரசுவா மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், அதன்பின் கடந்த 14ந்தேதி பஜாங் மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் உணரப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்