தாக்குதலில் வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறது இலங்கை

தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உள்ள வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறோம் என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

Update: 2019-04-22 09:55 GMT
இலங்கையில் தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய அமைப்பு என அந்நாட்டு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "3 குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நெட்வொர்க் உதவியின்றி இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உள்ள வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறோம் என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். 

இலங்கை முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்த சிறிசேனா, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் வெளிநாட்டு தொடர்ப்பை  கண்டறிய உலக நாடுகளின் உதவியை இலங்கை கோரும் எனக் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்