நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல்

நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்கவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-23 10:16 GMT
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் மார்ச் மாதம் 15-ம் தேதி இரு மசூதிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ வலதுசாரி அமைப்பினர் இத்தாக்குதலை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு அதற்கான பழிவாங்கல் செயலாகும் என தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சிறப்பு பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது.

இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜேவர்த்தனே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், “நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக ஞாயிறு அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்