சவுதி அரேபியாவில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2019-04-23 13:51 GMT
ரியாத்,

சவுதி அரேபியா நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், தீவிரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில், பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றியதும், பாதுகாப்பினை சீர் குலைக்க மற்றும் குழப்பங்களை விளைவிப்பது ஆகியவற்றிற்காக ஸ்லீப்பர் செல் எனப்படும் தீவிரவாத குழுக்களை உருவாக்கி வந்ததும் தெரிய வந்தது.  இதன் முடிவில், அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவானது.

இதுபற்றி சவுதி அரேபிய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், தீவிரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்