இலங்கையில் இன்று சிறிசேனா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

இலங்கையில் இன்று சிறிசேனா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2019-04-25 02:47 GMT
கொழும்பு,

இலங்கையில் கொழும்பு நகரில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 359 பேர் பலி ஆனார்கள். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்தனர். உலக நாடுகளை உலுக்கிய இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்டோரை இலங்கை அரசு அதிரடியாக கைது செய்து இருக்கிறது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை செய்ததாக இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இலங்கை முழுவதும் ஆளில்லா உளவு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், இலங்கையின் தற்போதைய நிலை, எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த  அதிபர் சிறிசேனா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 

மேலும் செய்திகள்