உலகைச் சுற்றி...

சவுதி அரேபியாவில் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி பெண் உரிமை ஆர்வலர்கள் 11 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-03 22:00 GMT

* சவுதி அரேபியாவில் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி பெண் உரிமை ஆர்வலர்கள் 11 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை அரசு தற்போது விடுதலை செய்துள்ளது.

* கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கிச்செனுமேகூசிப் நகரில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் ஒரு பெண் மற்றும் அவரது 4 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* ஜப்பானில் புதிய மன்னர் பதவி ஏற்று இருக்கும் நிலையில், தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை மற்றும் அரச குடும்பத்துடன் தொடர்புடைய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சிங்கப்பூரில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் முத்து கருப்பன் பெரியசாமி (வயது 52) என்கிற இந்தியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

* பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவின் மத்திய புலனாய் அமைப்பின் முன்னாள் இயக்குனர் மைக்கேல் மோரல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்