ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவு

ஈரான் நாட்டின் கேர்மன்சா நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவானது.

Update: 2019-05-11 17:18 GMT
டேரான்,

ஈரான் நாட்டின் மேற்கு கேர்மன்சா மாகாணத்தில், ஈராக் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ள எசில் பகுதியில் இன்று மதியம் 2.58 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகியது. இதனால் அந்த பகுதியில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.


 

மேலும் செய்திகள்