உலகைச்சுற்றி....

ஆப்கானிஸ்தான் நாட்டில் தக்கார் மாகாணத்தில் இரு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-05-19 22:30 GMT

* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக புதிய மற்றும் மேம்பட்ட ஒப்பந்தம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்காக கொண்டு வரப்படும் என அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே கூறினார்.

* பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள அரபிக்கடலில் எண்ணெய் வளம் இருக்கிறதா என்பதை கண்டறிய ஆழ்கடலில் தோண்டும் பணி நடந்தது. இதில் எண்ணெய் வளம் இல்லை என கண்டறியப்பட்டு, அந்தப் பணி நிறுத்தப்பட்டு விட்டது. இதை பிரதமரின் அந்தரங்க உதவியாளர் நதீம் பாபர் உறுதி செய்தார்.

* சோமாலியா அரசு படைகளிடம் அல் சபாப் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் சிடோ அப்தி கெடி சரண் அடைந்து விட்டார்.

* ஆப்கானிஸ்தான் நாட்டில் தக்கார் மாகாணத்தில் இரு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

* நமீபியா முன்னாள் துணை அதிபர் நிக்கி இயம்போ (வயது 83) மரணம் அடைந்தார். இவர் கடந்த ஆண்டுதான் உடல்நலக்குறைவால் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

* ஹாங்காங்கின் வடக்கு பிரதேசத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் பலி ஆனார்.

மேலும் செய்திகள்