தஜிகிஸ்தானில் சிறையில் கலவரம்: 32 பேர் பலி

தஜிகிஸ்தானில் சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர் பலியாகினர்.

Update: 2019-05-20 07:20 GMT
துஷான்பே, 

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பே நகரில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் வாதத் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள சிறைச்சாலையானது நாட்டிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலைகளில் ஒன்றாகும். 

இந்த சிறைச்சாலையில், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், கடந்த மே 19-ம் தேதி,  3 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சக கைதிகள் 5 பேரை ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, கைதிகள் கத்தியால் தாக்கி கொலை செய்தனர். 

இதனால், ஆத்திரம் அடைந்த பிற கைதிகள், சிறையில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், 32 பேர் கொல்லப்பட்டனர்.  கொல்லப்பட்டவர்களில் 24 பேர் ஐ.எஸ் இயக்க உறுப்பினர்கள் ஆவர். வன்முறையில் ஈடுபட்டவர்களில் சிலர் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்