உலகைச்சுற்றி...

* பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை வங்காளதேசம் நிறுத்தி வைத்துள்ளது.

Update: 2019-05-21 22:30 GMT
* பாகிஸ்தான் போதைப்பொருள் ஒழிப்பு துறை மந்திரி சர்தார் அலி முகமது மஹார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. இவர் சிந்து மாகாண முதல்-மந்திரி பதவியும் வகித்துள்ளார்.

* ஈராக் நாட்டில் சலாகுதீன் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதில் 11 பேர் பலியாகினர்.

* சீனாவில் குவாங்சி சுவாங் தன்னாட்சி பிரதேசத்தில் இரவு விடுதி ஒன்றின் கூரை இடிந்து விழுந்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் மார்ச் 15-ந் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்று குவித்தது தொடர்பான வழக்கில் கைதான பயங்கரவாதி பிரண்டன் டாரண்ட் மீது அங்குள்ள கோர்ட்டில் முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

* பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தின் மீது நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் ஏறினார். இதன் காரணமாக அந்த கோபுரத்தை பார்வையிட வந்திருந்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த நபர் பிடிக்கப்பட்டு, போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

* சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்துக்கு அமெரிக்க தொழில் நுட்பங்களை ஏற்றுமதி செய்ய டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் அதை அமல்படுத்துவதை ஆகஸ்டு மாதம் மத்தி வரை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் செய்திகள்