உலகைச் சுற்றி...

* பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல்பே மாகாணத்தில் பயணிகளை ஏற்றி சென்ற மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Update: 2019-05-22 22:30 GMT
* பிரான்ஸ் அதிபர் மெக் ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசி வாயிலாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் பிரச்சினை, சிரியா போர் மற்றும் ஈரான் அணுஆயுத விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக மூவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

* உள்நாட்டு போர் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் கடந்த 5 மாதங்களில் நாடு திரும்பி இருப்பதாக ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி அயர்லாந்து செல்ல இருப்பதாகவும், அங்கு அந்நாட்டின் பிரதமர் தயோசிசெக் வார்டாக்கரை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்