உலகைச் சுற்றி..

எகிப்தில் சினாய் தீபகற்ப பகுதியில் கடந்த 5-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 போலீசார் கொல்லப்பட்டனர்.

Update: 2019-06-08 22:30 GMT

* ஜெர்மனியை சேர்ந்த துருக்கி வம்சாவளி கால்பந்து வீரர் மேசுட் ஒஸிலி, துருக்கி முன்னாள் அழகி அமினி குல்சே ஆகியோரின் திருமணம், பாஸ்போரஸ் ஆற்றங்கரையில் உள்ள சொகுசு ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த மண விழாவில் மாப்பிள்ளை தோழனாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் இருந்து நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

* இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் உள்ள மூத்த தலைவர் மைக்கேல் கோவ், 20 ஆண்டுகளுக்கு முன்னதாக கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கு இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

* எகிப்தில் சினாய் தீபகற்ப பகுதியில் கடந்த 5-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளை அந்த நாட்டின் பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது.

* அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்து, அவரது பேச்சில் இடையூறு செய்த இந்திய வம்சாவளிப்பெண் பிரியா சாஹ்னி கைது செய்யப்பட்டுள்ளார்.

* மெக்சிகோ நாட்டு பொருட்கள் மீதான வரி விதிப்பை அமெரிக்கா நிறுத்தி வைக்கிறது. அதே நேரத்தில், தனது நாட்டினர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதை தடை செய்வதற்கு மெக்சிகோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

* வெனிசூலா நாட்டில் கொலம்பியா எல்லை கடந்த பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. அந்த எல்லையை திறந்து விடுமாறு வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்