இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவர் நியமனம்

இலங்கையில் புதிய உளவுத்துறை தலைவராக ருவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-06-13 12:53 GMT
கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.  இந்த தாக்குதல்களில் 258 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் பற்றி விசாரிக்க இலங்கையின் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு முன்பு, வாக்குமூலம் அளித்த இலங்கை உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ், ஏப்ரல் 21-இல் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலை தடுத்து இருக்கலாம் எனவும், பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த போதும், தொடர் பாதுகாப்பு ஆலோசனைகளை மேற்கொள்ள அதிபர் சிறிசேனா தவறிவிட்டார் என்று கூறியிருந்தார்.

 மேலும், தாக்குதலுக்கு முன்பாகவே,  உளவுத்துறை தகவல் பரிமாறப்பட்டதாகவும், அதிகாரிகள் அலட்சியம் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.  இதையடுத்து,  மென்டிஸ் உளவுத்துறை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.  இந்த நிலையில், இலங்கையின் புதிய உளவுத்துறை தலைவராக ருவன் குலதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்