நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் சாவு

நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-06-16 18:30 GMT
அபுஜா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள சம்பரா மாநிலத்துக்கு உட்பட்ட குவாலிடோ, துங்கர் ககாவு, சிடன் வாவா ஆகிய 3 கிராமங்களுக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். பின்னர் அங்குள்ள கிராமவாசிகள் மீது சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர்.

இந்த கொடூர சம்பவத்தில் குண்டு பாய்ந்து 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இந்த துப்பாக்கி சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்