மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்

இங்கிலாந்தில் மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-16 11:52 GMT
பிபிசி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலியும், அவரது ஒளிப்பதிவாளரும் தான் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியில் படப்பிடிப்புக்காக சென்ற அவர்கள், நீந்திக் கொண்டிருந்த போது, லிசி டேலியின் அருகில் நீந்திய ஜெல்லி மீனை அவரது ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளார்.

பொதுவாக ஜெல்லி மீன்கள் ஒரு மீட்டர் நீளம் மற்றும் 25 கிலோ எடை வரை மட்டுமே வளரும் தன்மை கொண்டவை என வனவிலங்கு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெல்லி மீனின் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


மேலும் செய்திகள்