உலகைச் சுற்றி...

* வடகொரியாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ஓட்டுப்போட்டார். இந்த தேர்தலில் 99.98 சதவீத வாக்குள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-07-22 22:30 GMT
* அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் நிதி நிலையை மேம்படுத்த கடன் பெறுவது தொடர்பாக ஐ.எம்.எப். அமைப்பின் செயல் நிர்வாக இயக்குனர் டேவிட் லிப்சனை சந்தித்து பேசினார். அப்போது உள்நாட்டில் வரி வசூலிப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை பெருக்குவதில் கவனம் செலுத்துமாறு இம்ரான்கானுக்கு டேவிட் லிப்சன் அறிவுரை கூறினார்.

* உக்ரைனில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியின் மக்கள் சேவகன் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

* சிங்கப்பூருக்கு அருகே தென்சீன கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த தென்கொரியாவின் சரக்கு கப்பல் மீது, கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி கப்பல் ஊழியர்களிடம் சுமார் ரூ.7 லட்சம் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்