பஹ்ரைனில் ஒரே நேரத்தில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பஹ்ரைனில் ஒரே நேரத்தில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-07-27 23:00 GMT

மனாமா, 

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு, கொலை, நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக துப்பாக்கி, வெடிபொருட்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இருவர், தனது சொந்த மசூதியின் இமாமை படுகொலை செய்த ஒருவர் என 3 பேரின் மரண தண்டனை ஒரே நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்ட விரோதமான அல்லது தன்னிச்சையான மரண தண்டனை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலமார்ட், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

குறிப்பாக முதல் வழக்கில், அலி முகமது ஹக்கீம் அராப், அகமது ஈசா மலாலி ஆகிய இருவரும் சித்ரவதைகளின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டதாகவும், அவர்கள் மீதான விசாரணை நியாயமற்ற ரீதியில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அது செவி சாய்க்கப்படவில்லை.

தண்டிக்கப்பட்ட 3 பேரும் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்