சீனக் கொடியை கடலில் தூக்கி எறிந்த நபரை அடையாளம் காட்டுபவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவிப்பு

ஹாங்காங்கில் போராட்டத்தின் போது சீனாவின் தேசியக் கொடியை ஒருவர் கடலில் தூக்கி எறிந்தார்.

Update: 2019-08-05 12:38 GMT
ஹாங்காங்,

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் தெரிவித்தார். 

இருப்பினும் அந்த மசோதாவை முழுவதும் கைவிடுமாறு அரசாங்கத்தை வழியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் சீனாவின் தேசியக் கொடியை கடலில் தூக்கி எறிந்தார். இச்செயலுக்கு அந்நாட்டு அதிகாரிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் தேசியக் கொடியை கடலில் தூக்கி எறிந்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ஹாங்காங் டாலர்கள் பரிசாக அளிக்கப்படும்  என ஹாங்காங்கின் முன்னாள் தலைமை நிர்வாகி லியாங் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்