சீனாவில் ‘லெகிமா’ புயலுக்கு 13 பேர் பலி

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த ‘லெகிமா’ என்ற சூப்பர் புயல் கரையை கடந்தது.

Update: 2019-08-10 10:32 GMT
பெய்ஜிங்,

சூப்பர் புயல் என்று அழைக்கப்படும் ‘லெகிமா’ இன்று அதிகாலை 1.45 மணியளவில் சீனாவின் வென்லிங் நகரத்தில் கரையைக் கடந்தது. மணிக்கு 187 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் வீசிய காற்றின் வேகம் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. 

இதையடுத்து அங்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்து விழுந்தன. கனமழை காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் செய்திகள்