பிரேசிலில் 16 பயணிகளுடன் பேருந்தை கடத்தியவரை சுட்டுக்கொன்றது போலீஸ்

பிரேசிலில் 16 பயணிகளுடன் பேருந்தை கடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Update: 2019-08-20 14:21 GMT
ரியோ டி ஜெனரியோ,

பிரேசிலில் 16 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தை துப்பாக்கி ஏந்திய ஒருவன் கடத்தினான். பேருந்தில் பயணிகள் போல ஏறிய கடத்தல்காரன்,  துப்பாக்கியை காட்டி மற்ற பயணிகளை மிரட்டியுள்ளான். 

இதையடுத்து, ரியோ மற்றும் நிடேராய் நகரை இணைக்கும் பாலத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பிரேசில் போலீசார், பேருந்தை கடத்திய நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது பணயக்கைதிகளாக பிடிபட்டு இருந்த 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை நடக்கும் போதே ஒருபக்கம் துப்பாக்கிசுடுதலில் திறமை பெற்ற வீரர்கள் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து ஒரு பணயக்கைதியின் தலையில் துப்பாக்கியை குறிவைக்கும் போது, துப்பாக்கிச்சூடு வீரர்கள் கடத்தல்காரனை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்