இத்தாலி பிரதமர் கியூசெப்பி கான்ட்டே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்

இத்தாலி பிரதமர் கியூசெப்பி கான்ட்டே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2019-08-20 14:31 GMT
இத்தாலியில் பிரதமர் கியூசெப்பி கான்ட்டே 14 மாதங்களுக்கு முன்னர் மேட்டியோ சால்வினியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினர். மேட்டியோ சால்வினி துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இப்போது சால்வினி கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை திரும்ப பெற்றார். மேலும் கியூசெப்பி கான்ட்டே தன்னுடைய பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பெரும்பான்மையில்லாத  கியூசெப்பி கான்ட்டே பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அதன்படி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

சுயநலனுக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் இத்தாலிக்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்குவதில் சால்வினி "பொறுப்பற்றவராக" செயல்பட்டுள்ளார் என கியூசெப்பி கான்ட்டே குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்