இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

இந்தோனேசியாவின் ஹல்மாஹேரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-09-15 03:35 GMT
ஜகார்டா,

இந்தோனேசியாவில் உள்ள ஹல்மாஹேரா தீவில் நேற்று மாலை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்ததாக ஐக்கிய நாடுகளின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு தொடர்பான தகவல்  இதுவரை வெளியாகவில்லை.

பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா இருப்பதால் தொடர்ச்சியாக நிலநடுக்கத்தாலும், எரிமலை வெடிப்புகளாலும் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்டு 2-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்