டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய மோடி

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் முன்பாகவே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்றும் அவர் கடுமையாக சாடினார்.

Update: 2019-09-23 04:01 GMT
ஹூஸ்டன், 

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாகப் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஒரு வாரக் கால அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்  ஏற்பாடு செய்த நலமா மோடி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.   இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பெருத்த கரகோஷத்துக்கு மத்தியில் பேசத்துவங்கிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை கடுமையாக சாடினர்.  அமெரிக்காவில் 9/11 தாக்குதல், மும்பையில் 26/11 தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் எந்த நாட்டில் இருந்தனர். பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க அதிபர் டிரம்ப் உறுதி பூண்டுள்ளார். அவருக்கு அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370- ரத்து செய்யப்பட்டது பற்றி பேசிய மோடி,  பயங்கரவாதம் மற்றும் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர  சட்டம் ரத்து செய்யப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்தியா பக்கம் நிற்கிறது. இந்தியாவின் நடவடிக்கைகள் தங்கள் சொந்த நாட்டை திறம்பட நிர்வகிக்க தெரியாத சிலருக்கு பிரச்சினையாக இருக்கிறது” எனவும்  மோடி பேசினார். 

மேலும் செய்திகள்