லண்டனில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரில் 20 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என தகவல்

லண்டனில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரில் 20 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-10-26 15:54 GMT
லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில், பல்கேரியாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியில் 39 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இங்கிலாந்தை அதிரச்செய்த இச்சம்பவம் குறித்து  உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயதான லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்டெய்னருக்குள் பிணமாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. 

லாரியில் இறந்த நிலையில் கடந்தவர்கள், சீன நாட்டவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன. ஆனால் 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்களா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்று சீனத் தூதரகம் தெரிவித்தது. இந்நிலையில் இறந்த 39 பேரில்  20 வியட்நாம் நாட்டைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்