இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.

Update: 2019-11-15 02:20 GMT
ஜகார்தா, 

இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கல் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.  உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடினர். 

சுனாமி ஏற்பட வாய்ப்பு குறைவாகவே இருக்கின்ற போதிலும், முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டியது அவசியம் என்று   உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. 

 நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.  சுலவேசி தீவுகளில் நிலநடுக்க கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மிகவும் பீதி அடைந்ததாக மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்